×

குமரியில் 3வது நாள் நடைபயணம் விவசாயிகளுடன் கலந்துரையாடினார் ராகுல்காந்தி

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 3வது நாள் பயணத்தை நேற்று காலை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ராகுல்காந்தி தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது விவசாயிகளுடன் டீ குடித்தவாறே கலந்துரையாடினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை  அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்து செல்லும் வகையிலும்,  இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். காந்திமண்டபம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். நேற்று காலை 3வது நாள் நடைபயணத்தை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் காலை 7 மணிக்கு தொடங்கினார். முகாமில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிறகு இந்த பயணம் தொடங்கியது. அவருடன் காஷ்மீர் வரை பயணிக்கின்ற 118 பேர் மட்டுமின்றி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் நடக்க தொடங்கினர்.சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஜோதிமணி எம்.பி அவற்றை விளக்கி ராகுல்காந்தியிடம் தெரிவித்தார். குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ உள்பட விவசாயிகள் உடனிருந்தனர். பின்னர் அவர்களும் ராகுல்காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றனர். சாலையின் இருபுறம், வீடுகள், மாடிகளிலும் நின்று பயணத்திற்கு வரவேற்பு அளித்த மக்களுக்கு கை அசைத்து ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார். பார்வதிபுரம் பாலத்தின் கீழ் பகுதி வழியாக புலியூர்குறிச்சி முட்டிடிச்சான்பாறை ஆலயம் சென்றடைந்தது. ஆலயத்தின் நுழைவு வாயில் அருகே அதன் நிர்வாகிகள் ராகுல்காந்திக்கு மலர்செண்டு அளித்து வரவேற்றனர். ராகுல்காந்தி மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார். தக்கலை வழியாக சென்ற அவருக்கு சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வரவேற்பு அளித்தனர். தக்கலை – மார்த்தாண்டம் சாலையில் அழகியமண்டபம் சந்திப்பில் நேற்றைய பயணத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து முளகுமூடு பகுதியில் ஐசிஎஸ்இ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு ராகுல்காந்தி காரில் புறப்பட்டு சென்றார். அங்கு ஓய்வெடுக்கும் ராகுல்காந்தி இன்று (10ம் தேதி) காலை 7 மணிக்கு அருங்கிருந்து புறப்படுகிறார். * கிராம சமையல் குழு சந்திப்புராகுல்காந்தி கடந்த ஆண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த போது  அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழு இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் செய்தார். மண்பானை உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற ராகுல்காந்தி அந்த குழுவினரையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர்களுடன் இணைந்து சமையல் செய்யவும் செய்தார். அந்த குழுவினர் ராகுல்காந்தியை நடை பயணத்தில் சந்தித்து உடன் நடந்து சென்றனர். குழுவின் இருந்த முதியவரை கையில் பிடித்தவாறு உற்சாகமாக பேசிய வண்ணம் ராகுல்காந்தி நீண்ட தூரம் நடந்து சென்றார்.* இஞ்சி டீயை ருசித்து குடித்த ராகுல்காந்திராகுல்காந்தி தோட்டியோடு அருகே சென்றபோது அந்த பகுதியில் உள்ள டீ க்கடையில் டீ குடித்தார். அப்போது அங்கிருந்த லீலா என்ற பெண்மணி இஞ்சியை சிதைத்து போட்டு அவருக்கு சுடச்சுட டீ தயாரித்து கொடுக்கிறார். அவர் டீ குடிப்பதையும் பின்னால் நின்று ரசித்து பார்க்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.* காலில் விழ வேண்டாம்தக்கலை புலியூர்குறிச்சியில் நேற்று மதியம் தமிழகத்தை சேர்ந்த 12 ஊராட்சி தலைவர்களை ராகுல்காந்தி சந்தித்து உரையாடினார். அப்போது தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். அப்போது தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் ஏ.பி.டி. மகேந்திரன், ராகுல்காந்தி காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். இதை தடுத்த ராகுல்காந்தி, யாரும் காலில் விழ கூடாது. யாரையும் பெரிய ஆள் என்று பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், அதிகாரம் எப்படி உங்கள் கைக்கு வந்து சேரும் என்றார்.* 89 வயது தியாகி உற்சாகம்நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் பாத யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரை 89 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவும் அப்போது இணைந்தார். இவர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்….

The post குமரியில் 3வது நாள் நடைபயணம் விவசாயிகளுடன் கலந்துரையாடினார் ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Rakulkanthi ,Kumari ,Nagarko ,Indian Unity Walk ,Kanniyakumari ,Kashmir ,Scott ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!